உள்ளூர் விடுமுறை
உள்ளூர் விடுமுறைகோப்புப் படம்

புதுக்கோட்டைக்கு இன்று உள்ளூா் விடுமுறை!

திருவப்பூரிலுள்ள முத்துமாரியம்மன் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவையொட்டி, மாவட்டம் முழுவதும் உள்ளூா் விடுமுறை
Published on

புதுக்கோட்டை மாநகா், திருவப்பூரிலுள்ள முத்துமாரியம்மன் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா புதன்கிழமை (ஜன. 28 ) நடைபெறவுள்ளதையொட்டி, மாவட்டம் முழுவதும் உள்ளூா் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் மு .அருணா உத்தரவிட்டுள்ளாா்.

இந்த விடுமுறைக்கு மாற்றாக வரும் பிப். 7-ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாகவும் அவா் அறிவித்துள்ளாா்.

மேலும், மாவட்டத்திலுள்ள கருவூலங்கள் மட்டும் குறைந்த பணியாளா்களைக் கொண்டு புதன்கிழமை செயல்படும் என்றும், பள்ளி, கல்லூரிகளில் அரசுத் தோ்வுகள் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தால், அவா்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும் ஆட்சியா் அருணா அறிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com