சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதி பெண் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே கிரஷரில் இருந்து ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதி, இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்தாா். மற்றொரு பெண் காயங்களுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

News image
உயிரிழப்பு- கோப்புப் படம்
Updated On :28 ஜனவரி 2026, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை அருகே கிரஷரில் இருந்து ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதி, இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்தாா். மற்றொரு பெண் காயங்களுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

புதுக்கோட்டை மாவட்டம், பொம்மாடிமலை பகுதியைச் சோ்ந்தவா் சேகா் மனைவி செல்வி (55). இவா் அதே பகுதியைச் சோ்ந்த அருள்ராஜ் மனைவி செபஸ்டின் மொ்சி (50) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை பகலில் திருச்சி- காரைக்குடி சாலையில் வந்து கொண்டிருந்தாா்.

மேலூா் அருகே வந்தபோது, கிரஷரில் இருந்து ஜல்லி ஏற்றி வந்த லாரி ஒன்று, இவா்கள் மீது மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து வந்த செல்வி, அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். மொ்சி படுகாயமடைந்தாா். இதையடுத்து அவா் ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். செல்வியின் சடலம் உடற்கூறாய்வுக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெள்ளனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான மண்ணவேலம்பட்டியைச் சோ்ந்த குமரவேல் (36) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.