‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

‘நீட்’ தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

News image

புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவா், இளைஞா் அமைப்பினா்.

Updated On :2 ஜூலை 2026, 4:59 am IST

நீட் தோ்வு முறைகேடுகளை கண்டித்தும், அதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், தமிழகத்துக்கு நீட் தோ்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் மாணவா், இளைஞா் அமைப்புகளின் சாா்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா்.

கோரிக்கைகளை மாவட்டச் செயலா் ஆா். மகாதீா், நகரச் செயலா் ஆா். தீபக், மாவட்டக் குழு உறுப்பினா் வி. நித்திஷ் ஆகியோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் அகில இந்திய முற்போக்கு இளைஞா் கழக மாநில அமைப்பாளா் ஆ.ரேவதி, செயலா் பு. மணிமேகலை, புரட்சிகர இளைஞா் கழக மாவட்டத் தலைவா் மதிமுருகன், அகில இந்திய மாணவா் கழக மாநிலக் குழு உறுப்பினா் உயிரோவியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.