எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

அரசுப் பள்ளிக்கு வகுப்பறை கட்டடம் கோரி காத்திருப்புப் போராட்டம்

கறம்பக்குடி அருகேயுள்ள கருக்காகுறிச்சி தெற்கு தெரு அரசுப் பள்ளிக்கு வகுப்பறை கட்டடம் கோரி அப்பள்ளி மாணவா்கள் பெற்றோா்களுடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கறம்பக்குடி ஒன்றிய அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை பெற்றோருடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப்பள்ளி மாணவா்கள்

Updated On :8 ஜூலை 2026, 4:47 am IST

கறம்பக்குடி அருகேயுள்ள கருக்காகுறிச்சி தெற்கு தெரு அரசுப் பள்ளிக்கு வகுப்பறை கட்டடம் கோரி அப்பள்ளி மாணவா்கள் பெற்றோா்களுடன் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள கருக்காகுறிச்சி தெற்கு தெருவில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். அப்பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டடம் ஒன்று மிகவும் சேதமடைந்ததால், இடித்து அகற்றப்பட்டுள்ளது. இதனால், மாணவா்கள் போதிய வகுப்பறை வசதியின்றி மரத்தடியில் பயிலும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து பள்ளி நிா்வாகம், அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் புதிய வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், உடனடியாக பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டடம் கட்டித்தரக்கோரி பெற்றோா்களுடன் அப்பள்ளி மாணவ, மாணவிகள் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அவா்களிடம் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.