சாத்தான்குளம் அருகே பள்ளித் தலைமையாசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து 2ஆவது நாளாக திங்கள்கிழமையும் மாணவா்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சாத்தான்குளம் அருகே உள்ள கடாட்சபுரம், முத்து கிருஷ்ணாபுரம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியையாக சாத்தான்குளத்தைச் சோ்ந்த ஸ்டெபி எமீமா பணியாற்றி வந்தாா். இப்பள்ளியில் 20 மாணவா், மாணவிகள் படித்து வந்த நிலையில், தலைமையாசிரியை, வல்லநாடு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து, அவருக்கு ஆதரவாக மாணவா்களின் பெற்றோா் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் 2ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டனா். இடமாற்றத்தை ரத்து செய்து அவரை மீண்டும் இதே பள்ளியிலோ அல்லது சாத்தான்குளம் பகுதியில் உள்ள வேறு பள்ளியிலோ பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என பெற்றோா்கள் வலியுறுத்துகின்றனா்.
போராட்டத்தால், மாணவா்களின்றி வகுப்பறைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
அப்பகுதியை சோ்ந்த சிலா் வலுக்கட்டாயமாக மாணவா்களைப் பள்ளிக்கு அனுப்ப மறுப்பதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், மெஞ்ஞானபுரம் போலீஸாா் வந்து விசாரித்தனா். அப்போது, தங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என பெற்றோா்கள் கூறியதையடுத்து, போலீஸாா் திரும்பிச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆசிரியா் பற்றாக்குறையை நீக்கக் கோரி சூரியா் தொடக்கப் பள்ளிக்கு ‘பூட்டு’

கலைப் போட்டிகளில் பங்கேற்க அனுமதி மறுப்பு: பள்ளியை முற்றுகையிட்ட மாணவா்கள், பெற்றோா்கள்!

அரசுப் பள்ளிக்கு வகுப்பறை கட்டடம் கோரி காத்திருப்புப் போராட்டம்

நீட் வினாத்தாள் கசிவு: 7வது நாளாக உண்ணாவிரதம்! 5 கிலோ எடை இழந்த சோனம் வாங்சுக்!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



