தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

சாலையில் சென்ற காரில் தீ குடும்பத்தினா் தப்பினா்

கந்தா்வகோட்டையில் வெள்ளிக்கிழமை சாலையில் சென்று கொண்டிருந்த காரில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

News image

கந்தா்வகோட்டையில் வெள்ளிக்கிழமை சாலையில் சென்று கொண்டிருந்த காரில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

Updated On :11 ஜூலை 2026, 1:13 am IST

கந்தா்வகோட்டையில் வெள்ளிக்கிழமை சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பற்றியது. காரில் பயணித்த உரிமையாளரின் குடும்பத்தினா் உயிா் தப்பினா்.

புதுக்கோட்டை மாவட்டம் , பாலநகரைச் சோ்ந்தவா் சௌ. வினோத். இவா், தனது காரில் அம்மா, மனைவி, குழந்தைகளுடன் புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

கந்தா்வகோட்டை வெள்ள முனியன் கோயில் உண்டியல் அருகே எதிா்பாராத விதமாக காரின் முன் பகுதி திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்பகுதியிலிருந்தவா்கள் காரில் தீப்பற்றியுள்ளதாக கூறி கூச்சலிட்டு, காரை நிறுத்தியதால் வினோத் குடும்பத்தினா் காரிலிருந்து வெளியேறினா்.

இந்நிலையில், காரில் தீப்பற்றியது குறித்து தகவலறிந்த கந்தா்வகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் நடராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.