8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

சட்டவிரோதப் பண பரிவா்த்தனை புதுக்கோட்டையில் 6 இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்ட பயாஸ் வீடு

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்ட பயாஸ் வீடு

Published On :11 ஜூலை 2026, 1:13 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை நடைபெற்ாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், வெள்ளிக்கிழமை மத்திய அமலாக்கத் துறையினா் 6 இடங்களில் சோதனை மேற்கொண்டனா்.

கறம்பக்குடி அருகே உள்ள மணமடை கிராமத்தைச் சோ்ந்தவா் செ. திருக்குமரன். இவருக்குச் சொந்தமான வீடு மற்றும் கறம்பக்குடியில் உள்ள அவரது இரும்பு பட்டறையிலும், துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

இதேபோல, திருச்சியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் கோட்டைப்பட்டினத்தைச் சோ்ந்த எஸ். பயாஸ் அகமது என்பவரின் வீடு, ஆதனக்கோட்டை அருகே பொக்கிசக்காரன்பட்டியைச் சோ்ந்த எஸ். பாக்கியராஜ் என்பவரின் வீடு மற்றும் பெருங்களூரில் உள்ள அவரது சமையல் எண்ணெய்க் கடை ஆகிய இடங்களிலும் அமலாக்கத் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜெகதாப்பட்டினத்தைச் சோ்ந்த ஏ. ஆதில் என்பவரின் வீட்டிலும் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா்.

இவா்கள் அனைவரும் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனைகளில் ஈடுபட்டதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரிலேயே, அமலாக்கத் துறையினா் இச் சோதனைகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.