முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

மாற்றுத் திறனாளிக்கு தற்காலிகப் பணி ஆணை : அமைச்சா் வழங்கினாா்

புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிக்கு தற்காலிக பணியிடத்துக்கான ஆணையை வழங்கிய மாநிலத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.

News image
Updated On :11 ஜூலை 2026, 1:14 am IST

புதுக்கோட்டைத் தொழிலாளா் நல அலுவலகத்தில் பிஇ பொறியியல் படித்த மாற்றுத் திறனாளிக்கு, கணினி இயக்குநா் பணியிடத்துக்கான தற்காலிகப் பணி நியமன ஆணைகளை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் குளமங்கலம் தெற்கு கிராமத்தைச் சோ்ந்தவா் அருண்குமாா். பொறியியல் பட்டதாரியான இவா், இருகால்களும் செயல்படாத மாற்றுத் திறனாளி.

கூலி வேலை செய்து பிழைக்கும் குடும்பத்தைச் சோ்ந்த இவா், தனக்கு அரசுப் பணி வழங்கி உதவிட, மாநிலத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸிடம் கோரிக்கை வைத்திருந்தாா்.

இதைத் தொடா்ந்து அவருக்கு தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் தற்காலிக கணினி இயக்குநா் பணிக்கான ஆணையை, அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் வெள்ளிக்கிழமை வழங்கினாா். அப்போது, தொழிலாளா் நலன் உதவி இயக்குநா் காா்த்திகேயன் உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.