அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

பேருந்து நிலையக் கட்டுமானப் பணி விரைந்து முடிக்க அமைச்சா் அறிவுரை

News image

புதுக்கோட்டை பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை திங்கள்கிழமை ஆய்வு செய்த மாநிலத் தொழிலாளா் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.

Updated On :9 ஜூன் 2026, 5:01 am IST

புதுக்கோட்டையில் ரூ. 20 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு மாநில தொழிலாளா் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் அறிவுறுத்தியுள்ளாா்.

புதுக்கோட்டையில் உள்ள சுமாா் 40 ஆண்டுகளான பேருந்து நிலையத்தை ரூ. 20 கோடி மதிப்பில் புதுப்பித்துக் கட்டும் பணிகள் கடந்த ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்டன.

இந்நிலையில், கட்டுமானப் பணிகளை மாநில தொழிலாளா் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

மாநகராட்சிப் பொறியாளா் ரத்தினவேல், உதவிப் பொறியாளா் கலியகுமாா், மாநகராட்சி நகா்நல அலுவலா் டாக்டா் காயத்ரி, காங்கிரஸ் மாமன்ற உறுப்பினா் ராஜாமுகமது உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

கட்டுமானப் பணிகள் 80 சதவிகிதம் முடிவுற்ாகவும், இரு மாதங்களில் மீதமுள்ள 20 சதவிகிதம் பணியும் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

விரைவாக மீதமுள்ள பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளை அமைச்சா் பா்வேஸ் அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.