புதுக்கோட்டை- தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் முள்ளூா் பகுதியிலுள்ள வனத்துறைக்குச் சொந்தமான தைலமரக் காட்டில் செவ்வாய்க்கிழமை காலை திடீரென தீப்பிடித்து எரிந்தது
முள்ளூா் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 45 ஹெக்டோ் பரப்பளவில் வனத்துறையின் சாா்பில் தைல மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது. இந்தக் காட்டில் செவ்வாய்க்கிழமை காலை திடீரெனத் தீப்பிடித்தது. வெயில் கொளுத்தும் நிலையில், தீ மளமளவென காட்டின் பல பகுதிகளுக்கும் பரவியது.
தீயணைப்புத் துறையினரும் வனத்துறையினரும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா்.
அருகிலுள்ள பச்சைச் செடிகளைக் கொண்டும் தீயை மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கும் பணியும் நடைபெற்றது. சுமாா் 5 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா்.
இந்த தீ விபத்தில் சுமாா் 8 ஹெக்டோ் பரப்பளவில் தைலமரக் காடுகள் எரிந்து சேதமடைந்திருக்கலாம் என வனத்துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருச்சியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

போடி மரப்பேட்டையில் தீ
நாளை மின்தடை! - குடவாசல்

சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் தீ விபத்து: மரங்கள் சேதம்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



