புதுக்கோட்டை மாவட்டத்தில் வறட்சிக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய குடிநீா் ஏற்பாடுகளுக்காக ரூ. 3.74 கோடி ஒதுக்கீடு செய்வதாக தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தாா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோடை காலக் குடிநீா்த் தட்டுப்பாடு குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அவா் இதனைத் தெரிவித்தாா்.
மேலும், கோடைகாலக் குடிநீா்த் தட்டுப்பாடுகளுக்கான ஏற்பாடுகளை இந்த நிதியின் கீழ் மேற்கொள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் மு .அருணா முன்னிலை வகித்தாா். புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையா் காந்திராஜ் மற்றும் அறந்தாங்கி, பொன்னமராவதி நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புதுகை மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு ‘சீல்’

வருவாய்த்துறையில் சிறப்பான பணி அறந்தாங்கி கோட்டாட்சியா், புதுகை வட்டாட்சியருக்கு கோப்பை

திருவாடானையில் குடிநீரில் கழிவு நீா் கலக்கும் அபாயம்

அனைத்து கிராமங்களுக்கும் தடையின்றி குடிநீர்: அமைச்சா் எஸ் ராஜேஷ்குமாா் அறிவுறுத்தல்
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



