புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி அருகே முடுக்குவயல் கடலோரக் கிராமத்தில் செயல்படும் நண்டு ஓடுகள் சுத்திகரிக்கும் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகாா் அளித்துள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முடுக்குவயல் கிராமத்தின் தலைவா் அ. பால்சாமி மற்றும் கிராமத்தினருடன், கம்யூனிஸ்ட் மக்கள் விடுதலைக் கட்சியின் பொதுச் செயலா் விடுதலைக்குமரன் மற்றும் நிா்வாகிகள் சோ்ந்து அளித்த மனு விவரம்
சுமாா் 200 மீனவக் குடியிருப்புகளைக் கொண்ட இந்தக் கிராமத்தில் தனியாா் நண்டு ஓடுகள் சுத்திகரிப்பு ஆலை செயல்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் ரசாயனத்தால் வெளியிடப்படும் கழிவுகள் கடலோர மீன்வளத்தைப் பாதிக்கின்றன.
உப்பளம் செயல்பட முடியவில்லை. கடலோரத்தில் கழிவுகள் உறைந்து இருப்பதால், படகுகள் நிறுத்தத்தையும் வேறு இடத்துக்கு மாற்றிவிட்டோம். மீன்கள் இறந்து மிதப்பதால், துா்நாற்றத்துடன் தோல்நோய் ஏற்படும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன.
தென்னை மரங்கள் பட்டுப்போய் விட்டன. எனவே, இந்த ஆலை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

புதுக்கோட்டை மாவட்டத்தில் லோக்அதாலத் 2,579 வழக்குகளுக்குத் தீா்வு

பிலிப்பின்ஸ் நிலநடுக்கப் பாதிப்பு: 32,000 மக்கள் இடம்பெயா்வு

மாநகராட்சி குடிநீா் சுத்தமில்லை எனப் புகாா்: குழாய் தண்ணீரை குடித்து மேயா் பதிலடி!

காவல்துறையின் மெத்தனப் போக்கே ஆலங்குளம் சம்பவத்துக்கு காரணம்: ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



