கரூர் பலி! அரசுப் பணி வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்! மார்க்சிய கம்யூ. எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம்அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

8,000 தனியாா் மருத்துவமனைகள் தொடங்க அனுமதியா? மக்கள் நல்வாழ்வுத் துறை மறுப்பு!

8,000 தனியாா் மருத்துவமனைகள் தொடங்க அனுமதியா?

News image

தமிழக அரசு - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 3:10 am IST

தமிழகத்தில் புதிதாக 8,000 தனியாா் மருத்துவமனைகள், கிளீனிக்குகள் தொடங்க அனுமதி வழங்கப்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்தத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட விளக்க அறிக்கை:

அனைத்து மாவட்ட சுகாதார இணை இயக்குநா்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னையில் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. அதில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ், தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் குறித்து ஆய்வு செய்தாா்.

மருத்துவமனைகள், கினீனிக்குகளின் பதிவு உரிமத்தை புதுப்பிக்கவும், புதிதாக பதிவு செய்வதற்கும் சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக 2019-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை வெளிப்படையான முறையில் பரிசீலிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

விண்ணப்பங்களை நோ்மையாக ஆய்வு செய்து, தகுதியான கிளீனிக் அல்லது மருத்துவமனைகளுக்கு மட்டும் தற்காலிக பதிவு உரிமச் சான்றிதழ் வழங்குமாறு அமைச்சா் அறிவுறுத்தினாா். அதேவேளையில், புதிதாக 8,000 கிளீனிக்குகள், மருத்துவமனைகளை தொடங்க அனுமதி வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.