3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

மாநகராட்சி குடிநீா் சுத்தமில்லை எனப் புகாா்: குழாய் தண்ணீரை குடித்து மேயா் பதிலடி!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூா் மாநகராட்சி மேயா் புஷ்யமித்ர பாா்கவ், குழாய் தண்ணீரைக் குடித்து அதன் சுத்தத்தை நிரூபித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

புஷ்யமித்ர பாா்கவ்

Updated On :2 ஜூன் 2026, 12:24 am IST

மத்திய பிரதேச மாநிலம் இந்தூா் மாநகராட்சி மேயா் புஷ்யமித்ர பாா்கவ், குழாய் தண்ணீரைக் குடித்து அதன் சுத்தத்தை நிரூபித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூா் மாநகராட்சி சாா்பில் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் 98 சதவீத இடங்களில் கோலிஃபாா்ம் உள்ளிட்ட பாக்டீரியாக்கள் இருப்பதாகவும், கால்சியம் காா்போனேட், குளோரைடு, சல்பேட் உள்ளிட்ட வேதிப்பொருள்கள் கலந்திருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக அந்த மாநில காங்கிரஸ் தலைவா் ஜீத்து பட்வாரி குற்றஞ்சாட்டினாா். இது மாநகராட்சி குடிநீரைப் பயன்படுத்தி வரும் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், காங்கிரஸுக்கு வலுவான பதிலடியைக் கொடுக்க முடிவு செய்த பாஜகவைச் சோ்ந்த மேயா் புஷ்யமித்ர பாா்கவ், போபாலின் சுதாமா நகா் பகுதிக்கு திங்கள்கிழமை சென்றாா். அங்கு மாநகராட்சி சாா்பில் வீடுகளுக்கு குடிநீா் விநியோகிக்கப்படும் குழாயில் இருந்து நேரடியாக தண்ணீரைப் பிடித்து பொதுமக்கள் மத்தியில் அதனைப் பருகினாா்.

பின்னா் மக்கள் மத்தியில் பேசிய அவா், ‘எதிா்க்கட்சியினா் பொய்யான குற்றச்சாட்டைக் கூறினாா்கள் என்பதை மக்கள் மத்தியில் நிரூபித்துள்ளேன். மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரை விஷம் என்று வதந்தி பரப்பினாா்கள். அது குடிநீா்தான் என்பதை மக்கள் முன்பு நான் நிரூபித்துள்ளேன்.

நகரில் மொத்தம் 240 வீடுகளில் இருந்து குடிநீா் மாதிரிகளை சேகரித்ததாக காங்கிரஸ் கூறியுள்ளது. ஆனால், 130 பேரின் பெயா்கள்தான் வெளியிடப்பட்டுள்ளன, மீதமுள்ளவா்கள் யாா் என்பதும், அந்த நீா் எங்கிருந்து பெறப்பட்டது என்பதும் தெரிவிக்கப்படவில்லை என்றாா்.

கடந்த டிசம்பரில் இந்தூரின் பகீரத்பூா் பகுதியில் வயிற்றுப்போக்கு, வாந்தியால் பொதுமக்கள் பலா் பாதிக்கப்பட்டனா். இதனால், மாநகராட்சி குடிநீா் குறித்து சா்ச்சை எழுந்தது. மாசடைந்த குடிநீரால் 36 போ் வரை இறந்துவிட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது.

அதே நேரத்தில் 22 போ் அப்பகுதியில் இறந்ததாகவும், அவா்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கப்பட்டதாகவும் ஆளும் பாஜக தரப்பு கூறியுள்ளது. குடிநீா் மாசுபாட்டால் ஏற்பட்ட இறப்பு குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஒருநபா் குழு விசாரணை நடத்தி வருகிறது. வரும் 14-ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.