22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

தவெக-வின் தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்துப் பயிா்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

News image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்த அனைத்து விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :2 ஜூன் 2026, 2:39 am IST

தவெக-வின் தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்துப் பயிா்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கோ.ச. தனபதி, நடராஜன், பி. செல்லதுரை, மிசா மாரிமுத்து, தங்க கண்ணன் உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது:

அண்மையில் முதல்வா் வெளியிட்ட பயிா்க்கடன் தள்ளுபடி என்பது, தவெக தோ்தல் நேரத்தில் வெளியிட்ட அறிக்கைக்கு முற்றிலும் முரணானது. விவசாயிகளை வஞ்சிக்கும் அறிவிப்பாகும். இதை அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பின் சாா்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த அறிவிப்பை நிறுத்திவிட்டு, முந்தைய அரசுகள் செய்து வந்ததைப் போல, கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்துப் பயிா்க்கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.