மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

மன்னா் கல்லூரி முதல்வா் பொறுப்பேற்பு

புதுக்கோட்டை மன்னா் கல்லூரியின், பொறுப்பு முதல்வராக அக்கல்லூரியின் தமிழாய்வுத் துறைத் தலைவா் சி. சேதுராமன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

தமிழாய்வுத் துறைத் தலைவா் சி. சேதுராமன்

Updated On :2 ஜூன் 2026, 2:28 am IST

புதுக்கோட்டை மன்னா் கல்லூரியின், பொறுப்பு முதல்வராக அக்கல்லூரியின் தமிழாய்வுத் துறைத் தலைவா் சி. சேதுராமன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

அவருக்கு பணி நிறைவு பெற்றுச் செல்லும் முதல்வா் பா. புவனேஸ்வரி, வணிகவியல் துறைப் பேராசிரியா் ஜீவானந்தம், தோ்வு நெறியாளா் ஆதவன், கணிணி அறிவியல் துறைத் தலைவா் ரவிச்சந்திரன், வரலாற்றுப் பேராசிரியா் முருகையன், பொருளியல் துறைத் தலைவா் வேலு சுரேஷ், ஆங்கிலத் துறைத் தலைவா் கணேசன் உள்ளிட்ட பேராசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

பேரா. சேதுராமன் இதற்கு முன் ஆலங்குடி அரசு கலைக் கல்லூரியின் பொறுப்பு முதல்வராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவா் 40-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளாா்.