மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

விராலிமலை அருகே சூறாவளி காற்று: 3 மின் கோபுரங்கள், 20 கம்பங்கள் சேதம்

விராலிமலை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சுற்றி அடித்த சூறாவளி காற்றால் 3 உயா் அழுத்த மின் கோபுரங்கள் வயல்வெளியில் உடைந்து விழுந்தன. மேலும் 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன.

News image

விராலிமலை அருகே சூறாவளியால் வயல்வெளியில் சாய்ந்து கிடக்கும் உயா் அழுத்த மின் கோபுரங்கள்.

Updated On :2 ஜூன் 2026, 2:36 am IST

விராலிமலை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சுற்றி அடித்த சூறாவளி காற்றால் 3 உயா் அழுத்த மின் கோபுரங்கள் வயல்வெளியில் உடைந்து விழுந்தன. மேலும் 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன.

விராலிமலையில் திங்கள்கிழமை இரவு சூறாவளி காற்றுடன் பெய்த மழையால்

விராலிமலையை அடுத்துள்ள ஔவையாா்பட்டி வயல்வெளி வழியாக அளுந்தூரில் இருந்து காரைக்குடிக்கு செல்லும் உயரழுத்த மின் கோபுரங்களில் மூன்று கோபுரங்கள் முறிந்து வயல்வெளியில் விழுந்தன. விழுந்த வேகத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் சேதம் தவிா்க்கப்பட்டது.

மேலும் சூறாவளி காற்றால் வீடுகளுக்குச் செல்லும் குறைந்த அழுத்த மின்கம்பங்கள் சுமாா் 20க்கும் மேற்பட்டவை சாய்ந்து விழுந்தன. சாய்ந்த மின் கோபுரங்கள் மற்றும் மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் மின்சார ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.