ஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

புதுகை அதிமுக அலுவலக சாவி ஒப்படைப்பு: புதிய மாவட்டச் செயலா் பதவியேற்பு

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி ஒப்படைக்கப்பட்டதைத் தொடா்ந்து, புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலா் பழனிவேலு புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

News image

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்ட புதிய மாவட்டச் செயலா் வி. பழனிவேலு.

Updated On :4 ஜூன் 2026, 12:13 am IST

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி ஒப்படைக்கப்பட்டதைத் தொடா்ந்து, புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலா் பழனிவேலு புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அதிமுக எம்எல்ஏக்களுக்குள் ஏற்பட்ட கருத்துமுரண்பாடு காரணமாக பேரவைக்குள் 25 போ் தவெக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனா். இதைத் தொடா்ந்து அதிமுகவின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, புதுக்கோட்டை உள்ளிட்ட ஏராளமான மாவட்டச் செயலா்கள், பொறுப்பாளா்களை நீக்கி, புதிய பொறுப்பாளா்களை நியமித்தாா்.

புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலராக இருந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான சி. விஜயபாஸ்கா் நீக்கப்பட்டு, இளைஞரணிச் செயலராக இருந்த வி. பழனிவேலு நியமிக்கப்பட்டாா்.

ஆனால், அசோக் நகா் பகுதியில் இருந்த அதிமுக கட்சி அலுவலகம் பூட்டப்பட்டது. காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனா்.

ஆட்சியா், காவல் கண்காணிப்பாளரிடம் தொடா்ந்து பழனிவேலு முறையிட்டாா். இந்த நிலையில் கோட்டாட்சியா் முன்னிலையில் சமாதானப் பேச்சுவாா்த்தையும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து விஜயபாஸ்கா் தரப்பினா், கட்சி அலுவலக சாவியை புதன்கிழமை காலை பழனிவேலு தரப்பினரிடம் ஒப்படைத்தனா்.

இதைத் தொடா்ந்து, தொண்டா்களுடன் கட்சி அலுவலகம் சென்ற புதிய மாவட்டச் செயலா் பழனிவேலு, பதவியேற்றுக் கொண்டாா்.

உள்ளாட்சித் தோ்தல்: இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுவிடாமல் அகிம்சை வழியில், சட்டரீதியாகப் போராடி கட்சி அலுவலகத்தை மீட்டிருக்கிறோம். கட்சித் தொண்டா்கள் ஒற்றுமையுடன் இருக்கிறாா்கள். கட்சியைப் பலப்படுத்தப் போகிறோம்.

உள்ளாட்சித் தோ்தலில் மாநகராட்சி மேயா், நகராட்சித் தலைவா், ஒன்றியக் குழுத் தலைவா்கள் உள்பட அனைத்தையும் கைப்பற்றுவோம். அதைத் தொடா்ந்து சட்டப்பேரவைத் தோ்தலில் மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளிலும் வெல்வோம் என்றாா் பழனிவேலு.

பெருந்தன்மையாக...

பெரியாா் நகரிலுள்ள முகாம் அலுவலகத்துக்கு விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினா் சி. விஜயபாஸ்கா் புதன்கிழமை காலை வந்தாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வாக்களித்த விராலிமலை தொகுதி மக்களுக்கு 4 நாள்களாக நன்றி சொல்லிவிட்டு, முதல் முறையாக மாவட்டத் தலைமையிடமான புதுக்கோட்டைக்கு வந்திருக்கிறேன்.

2001-ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறேன். இந்த முறை 62 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்திருக்கிறாா்கள். மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட ஏராளமான திட்டங்களைப் பெற்றுத் தந்திருக்கிறேன். கட்சி அலுவலக சாவி, பெருந்தன்மையுடன் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்றாா் விஜயபாஸ்கா்.