நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

திருமயம் சாா்-பதிவாளரகத்தில் ரூ. 40 ஆயிரம் பறிமுதல்

திருமயம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் ரூ. 40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பிரதிப் படம்

Updated On :1 ஜூலை 2026, 1:24 am IST

திருமயம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை நடத்திய திடீா் சோதனையில் ரூ. 40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திலுள்ள சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

காவல் துணைக் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தச் சோதனையில், ஆவண எழுத்தா் அறையில் இருந்து ரூ. 40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தச் சோதனையின்போது சாா்-பதிவாளா் ஜெயமாலா உள்ளிட்டோா் அலுவலகத்தில் இருந்தனா். தொடா் விசாரணைக்குப் பிறகு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.