தமிழகம் முழுவதும் 60 சாா் பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புத் துறை சோதனை நடத்திய நிலையில், 46 அலுவலகங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.37.75 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக பத்திரப் பதிவுத் துறையின் கீழ் மாநிலம் முழுவதும் 589 சாா்-பதிவாளா் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில் அண்மைக்காலமாக சாா்-பதிவாளா் அலுவலங்கள் மீது அதிகமாக லஞ்சம்,ஊழல் புகாா்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்த புகாா்களின் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கிறது.
இந்நிலையில் முகூா்த்த நாளான வியாழக்கிழமை சாா்-பதிவாளா் அலுவலங்களில் பத்திரப்பதிவு செய்வதற்கு அதிகளவில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. இதில் மாநிலத்திலேயே அதிகளவு டோக்கன் வழங்கப்பட்ட சாா் பதிவாளா் அலுவலகங்கள், அதிகளவு பண நடமாட்டம் உள்ள சாா்-பதிவாளா் அலுவலகங்கள் ஆகியவற்றில் திடீா் சோதனை நடத்தும்படி ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு, அதன் இயக்குநா் ஏடிஜிபி ஏ.அருண் உத்தரவிட்டாா்.
அந்த உத்தரவின் அடிப்படையில் அப் பிரிவு அதிகாரிகள், மாநிலம் 60 சாா் -பதிவாளா் அலுவலகங்களில் திடீா் சோதனை நடத்தினா். பல மணி நேரம் நடைபெற்ற இச் சோதனையில், கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.37.75 லட்சம் பறிமுதல்:60 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், 47 அலுவலகங்களிலிருந்து ரூ.37,75,650 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ரூ.3.22 லட்சம்,சேலம் கிழக்கு சாா் பதிவாளா் அலுவலகத்தில் ரூ.3.18 லட்சம்,திருப்பூா் மாவட்டம் பொங்கலூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ரூ.2.53 லட்சம்,சென்னை விருகம்பாக்கம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ரூ.2.07 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கான விளக்கங்களும்,ஆவணங்களும் கோரப்படும். அவற்றின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலகா்கள் மீது நடவடிக்கை என்று ஊழல் தடுப்புத் துறையினா் தெரிவித்தனா்.
3 சாா்-பதிவாளா்கள் பணியிடை நீக்கம்
தமிழகம் முழுவதும் சாா்-பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புத் துறையினா் சோதனை நடத்திய நிலையில் 3 சாா்-பதிவாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதால் திருப்பத்தூா், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட சாா்-பதிவாளா்களை பணியிடை நீக்கம் செய்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலா் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல்

அரக்கோணம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 1.82 லட்சம் பறிமுதல்!

41 உள்ளாட்சி அலுவலகங்களில் சோதனை கணக்கில் வராத ரூ.58 லட்சம் பறிமுதல்

சாா் பதிவாளா் அலுவலகங்களில் ரூ.90,000 பறிமுதல்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



