லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வருவாய்த் துறையினா் மறியல்: 450 போ் கைது

News image
Updated On :5 மார்ச் 2026, 10:22 pm

பணிப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் 2ஆம் நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 450 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வருவாய்த் துறையில் பணிபுரியும் அனைவருக்கும் பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக இரண்டாம் நாளாக புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையப் பகுதியில் நடந்த சாலை மறியலுக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சக்திவேல் தலைமை வகித்தாா். போராட்டத்தில் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா். இதைத் தொடா்ந்து 200 பெண்கள் உள்பட 450 பேரை போலீஸாா் கைது செய்தனா்.