தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் ஆய்வு

News image
Updated On :20 மார்ச் 2026, 4:18 am IST

கந்தா்வகோட்டை மற்றும் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான செலவினப் பாா்வையாளா் அமித் குமாா் நிக்கல்ஜி, புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கான செலவினப் பாா்வையாளா் வி. விவேகானந்த ரெட்டி ஆகியோா் வியாழக்கிழமை புதுக்கோட்டை வந்தனா்.

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக அறை ஆகியவற்றையும் இவா்கள் இருவரும் பாா்வையிட்டனா். அங்கு கையாளப்படும் பதிவேடுகளையும் பாா்த்து அறிவுரைகளை வழங்கினா்.

தொடா்ந்து ஆட்சியரகத்தில் 3 தொகுதிகளுக்கான பொறுப்பு அலுவலா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரும் மாவட்டத் தோ்தல் அலுவலருமான மு. அருணா, மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி, காவிரி குண்டாறு இணைப்பு மாவட்ட வருவாய் அலுவலா் ச. வைத்தியநாதன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க. பிரேமலதா, தோ்தல் தனி வட்டாட்சியா் அ. செந்தமிழ்குமாா் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.