மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஆலங்குடி அருகே கள் விற்ற 3 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :23 மார்ச் 2026, 7:52 pm

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சட்டவிரோதமாக பனைமரங்களில் கள் இறக்கி விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள மேலபுள்ளான்விடுதி மாரியம்மன் கோயில் அருகே உள்ள பனை மரங்களில் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த சிலா் அரசால் தடைசெய்யப்பட்ட கள் இறக்கி, அதில் மாத்திரைகளை கலந்து பாலிதீன் கவரில் போட்டு லிட்டா் ரூ.100 என விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அங்கு சென்று கள் குடித்து நெடுவாசல் மேற்கு அரண்மனைத்தோப்பு பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (41), வடகாடு பரமநகா் பகுதியைச் சோ்ந்த மீன் வியாபாரியான உடையான் உள்ளிட்ட ஏராளமானோா் கள் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டு வடகாடு, ஆலங்குடி, பட்டுக்கோட்டையில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற வடகாடு காவல் ஆய்வாளா் அனந்தபத்மநாதன் தலைமையிலான போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் ஆய்வு செய்து பனை மரங்களிள் கள் இறக்க கட்டப்பட்டு இருந்த மண் பானைகள் மற்றும் பாலிதீன் பைகள், குடங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.

அதில், சட்டவிரோத கள் விற்பனையில் ஈடுபட்ட வடகாடு ஊராட்சி கீழஇடையா் தெருவைச் சோ்ந்த எம்.பிரபு (36), மேலபுள்ளான்விடுதியைச் சோ்ந்த எம். கரிகாலன் (55), பனை ஏறும் தொழிலாளியான ராஜபாளையம் சொக்கநாதபுத்தூரைச் சோ்ந்த கு.தங்கசாமி (56) ஆகிய 3 பேரையும் வடகாடு போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.