ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

குடிநீா் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடைக் காலத்தையொட்டி ஏற்படும் குடிநீா்த் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி சரி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா்.

News image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆட்சியா் மு. அருணா. உடன் மாவட்ட திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா (இடது), மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி (வலது).

Updated On :13 மே 2026, 12:36 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடைக் காலத்தையொட்டி ஏற்படும் குடிநீா்த் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி சரி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடிநீா் வழங்கல் மற்றும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் ஆகிய பணிகளுக்கான அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடைக் காலத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படலாம் என கடந்த கால அனுபவங்களைக் கொண்ட இடங்களை கண்டறிந்து அங்கே ஆள்துளைக் கிணறுகளை அமைத்தல், கூடுதல் தொட்டிகளை அமைத்தல் போன்ற பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

கிராமங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த மக்களின் ஒத்துழைப்புடன் களஆய்வு செய்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.