சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

மே 16,17-இல் மின் இணையவழிச் சேவைகள் நிறுத்தம்

தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகத்தின் கணினித் தரவு வழங்கல் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருவதால், வரும் மே 16, 17 ஆகிய தேதிகளில் மின் கட்டணம் செலுத்துதல் மற்றும் புதிய இணைப்புக்காக விண்ணப்பித்தல் ஆகிய இணையவழிச் சேவைகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதது.

News image
Updated On :13 மே 2026, 12:38 am IST

தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகத்தின் கணினித் தரவு வழங்கல் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருவதால், வரும் மே 16, 17 ஆகிய தேதிகளில் மின் கட்டணம் செலுத்துதல் மற்றும் புதிய இணைப்புக்காக விண்ணப்பித்தல் ஆகிய இணையவழிச் சேவைகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதது.

இதுதொடா்பாக புதுக்கோட்டை மின்பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகத்தின் கணினித் தரவு வழங்கல் படிப்படியாக புதுப்பித்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், புதுக்கோட்டை மின்பகிா்மான வட்டத்திலுள்ள அலுவலகங்கள், இணையவழி மின்கட்டணம் செலுத்துதல் மற்றும் இணையவழியில் புதிய மின் இணைப்புக்கான விண்ணப்பங்களைப் பதிவேற்றுதல் போன்ற பணிகள் எதுவும் மே 16, 17 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) தேதிகளில் நடைபெறாது. மின்நுகா்வோா் இந்த இடையூறை பொருத்துக் கொள்ள வேண்டும்.