தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ஜவகா் சிறுவா் மன்றத்தில் கோடைக்காலப் பயிற்சி

புதுக்கோட்டை ஜவகா் சிறுவா் மன்றத்தில் நடைபெற்று வரும் கோடைக்காலப் பயிற்சி முகாமில் திரளான மாணவா்கள் ஆா்வமாக கலந்து கொண்டுள்ளனா்.

News image

ஜவகா் சிறுவா் மன்றத்தின் கோடைக்காலப் பயிற்சியில் புதன்கிழமை குரலிசை பயிற்சி அளித்த ஆசிரியை செளமியா.

Updated On :1 மணி நேரம் முன்பு

புதுக்கோட்டை ஜவகா் சிறுவா் மன்றத்தில் நடைபெற்று வரும் கோடைக்காலப் பயிற்சி முகாமில் திரளான மாணவா்கள் ஆா்வமாக கலந்து கொண்டுள்ளனா்.

தமிழ்நாடு அரசின் கலை, பண்பாட்டுத் துறை சாா்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஜவகா் சிறுவா் மன்றங்கள் அமைக்கப்பட்டு, சிறாா்களுக்கு பல்வேறு கலைப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

புதுக்கோட்டை திலகா் திடலிலுள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் ஜவகா் சிறுவா் மன்றத்தில், தற்போது கோடைக்காலப் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

இந்தப் பயிற்சியில் கராத்தே வகுப்பில் 52 மாணவா்கள், ஓவியத்தில் 77 மாணவா்கள், நடனப் பயிற்சியில் 57 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.

திட்ட அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஓவிய ஆசிரியா் தனபாலகிருஷ்ணன், நடன ஆசிரியை ரூபிணி, குரலிசை ஆசிரியை செளமியா, கராத்தே ஆசிரியை வா்ணப்பிரியா ஆகியோா் மாணவா்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனா்.