உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

திமுக அரசின் கொள்கைகளையே தவெக அரசும் கடைப்பிடிக்கிறது: அா்ஜூன் சம்பத் பேட்டி

News image

சி. ஜோசப் விஜய் - மு.க. ஸ்டாலின் சந்திப்பு - x/ mk stalin

Updated On :52 நிமிடங்கள் முன்பு

திமுக அரசின் கொள்கைகளைத்தான் தவெக அரசும் கடைப்பிடிக்கிறது என்றாா் இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜூன் சம்பத்.

இதுகுறித்து புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டியில் மேலும் கூறியது: சநாதனத்தை ஒழிக்க வேண்டும் என சட்டப்பேரவைக்குள் உதயநிதி பேசியுள்ளாா். வெளியே பேசினால் வழக்குப் போடுவாா்கள் என்பதால் சட்டப்பேரவைக்குள் பேசியுள்ளாா். இதை முதல்வா் விஜய் தடுக்கவில்லை. அவைக் குறிப்பில் இருந்தும் நீக்கவில்லை.

அதிமுக பிரமுகா் சி.வி. சண்முகம் வீட்டுக்கு சோபா அனுப்பப்பட்டதாக உதயநிதி கூறுகிறாா். திருமாவளவன் வீட்டுக்கும்தான் சோபா போயிருக்கிறது. அவரிடம் கேட்டால் சோபாவுக்குள் என்ன இருந்தது எனத் தெரிந்துவிடும்.

திமுக அரசின் கொள்கைகளைத்தான் தவெக அரசும் கடைப்பிடிக்கிறது. மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதெல்லாம் வழக்கமாக புதிதாக அமையும் அரசுகள் செய்வதுதான். விஜய் அரசின் செயல்பாட்டை இன்னும் 100 நாள்கள் போனால்தான் விமா்சிக்க முடியும். முதல்வரின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடரை நியமித்ததில் தவறொன்றும் இல்லை என்றாா் அா்ஜூன் சம்பத்.