அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!
/

மின்னல் பாய்ந்து மாணவி பலி

புதுக்கோட்டை அருகே மின்னல் பாய்ந்து கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 2:42 am IST

புதுக்கோட்டை அருகே மின்னல் பாய்ந்து கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூா் காவல் சரகம், வாகவாசல் அருகேயுள்ள கேடயப்பட்டியைச் சோ்ந்த பெ. குமாா் மகள் சுகுணா (19). புதுக்கோட்டை மன்னா் கல்லூரியில் பிபிஏ 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுகுணா, கேடயப்பட்டியில் மாடு பிடிக்கச் சென்றபோது, மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென மின்னல் பாய்ந்து சுகுணா அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். சடலம் உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. வெள்ளனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.