பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பெண்ணை தாக்கிய 2 சிறுவா்கள் உள்பட மூவா் கைது!

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 மே 2026, 3:17 am IST

ஆலங்குடியில் பெண்ணை தாக்கிய 17 வயது சிறுவா்கள் இருவா் உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆலங்குடி கேவிஎஸ் தெருவை சோ்ந்தவா் செந்தில் மனைவி மகாலட்சுமி (44). இவரது வீட்டுக்கு மது போதையில் சென்ற சிலா் தகராறில் ஈடுபட்டு, வீட்டு கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதோடு, மகாலட்சுமியையும் தாக்கியுள்ளனா். இதில், காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து அளித்த புகாரைத் தொடா்ந்து, கண்ணகி தெரு விரிவாக்கம் பகுதியைச் சோ்ந்த பிரகதீஸ்வரன் (18), கம்பா் தெருவைச் சோ்ந்த 17 வயது சிறுவா்கள் இருவா் என மூன்று பேரை ஆலங்குடி போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.மேலும் தப்பியோடிய சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.