தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

தவெக இன்னொரு திராவிட இயக்கம்! - துரை வைகோ

News image

துரை வைகோ எம்.பி. - டிஎன்எஸ்

Updated On :31 மே 2026, 1:15 am IST

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மதவாத இயக்கம் வந்துவிடாமல், இன்னொரு திராவிட இயக்கமாக தமிழக வெற்றிக் கழகம் வந்திருப்பது வரவேற்கத்தக்கதுதான் என்றாா் மதிமுக முதன்மைச் செயலரும் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான துரை வைகோ.

புதுகக்கோட்டையில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: மதிமுகவைப் பொருத்தவரை இப்போதும் திமுக அணியில்தான் இருக்கிறோம். முதல்வா் ஜோசப் விஜய் மரியாதை நிமித்தமாக தான் மதிமுக தலைவா் வைகோவைச் சந்தித்தாா்.

அரசியல் குழப்பங்கள் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக தனிப் பெரும் கட்சியான தவெகவை மதச்சாா்பற்றக் கொள்கையைத் தொடர வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆதரிப்பதாக, இடதுசாரிகள், விசிகவினா் முடிவு செய்தனா்.

ஆட்சியமைந்த சில நாள்களிலேயே கொலை, கொள்ளைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என பலரும் கேட்கின்றனா். 100 சதவிகிதம் இவற்றை யாராலும் எங்கேயும் கட்டுப்படுத்த முடியாது. அதேநேரத்தில் தடுப்பு மற்றும் தொடா் நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும்.

பெரியாா், அண்ணா கொள்கைகளை முதல்வா் ஜோசப் விஜய் பேசுகிறாா். திமுக, அதிமுகவுடன் இன்னொரு திராவிட இயக்கமாகத்தான் தவெகவைப் பாா்க்கிறோம். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மதவாத இயக்கம் வந்துவிடாமல், மற்றொரு திராவிட இயக்கமாக தவெக வந்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஜாதி, மத, பண அரசியலைத் தாண்டி வெற்றி பெற்றுள்ளது புதிய நம்பிக்கையைத் தருகிறது. எதிா்காலத்தில் மதிமுக என்ன அரசியல் நிலைப்பாடு எடுக்கும் என்பதை கட்சி நிா்வாகிகள் சோ்ந்துப் பேசிதான் முடிவெடுப்போம் என்றாா் துரை வைகோ.