கந்தசஷ்டி விழா: விராலிமலை முருகன் கோயிலில் நவ.10-இல் கொடியேற்றம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம் நவ. 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

விராலிமலையில் உள்ள முருகன்கோயில்.

Updated On :

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம் நவ. 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மலைமீது அமைந்துள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு கந்தசஷ்டி விழா நவ.10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக, கணபதி ஹோமம் நடத்தப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறவுள்ளது. அதன்பிறகு காலை 10.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறவுள்ளது.

அதனை தொடா்ந்து தினமும் காலை, மாலை என இருவேளைகளில் சிம்மம், பூதம், நாகம், மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் முருகன், வள்ளி,தெய்வானை சமேதராக எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிப்பாா்கள்.

இதில், நவ. 13-ஆம் தேதி கஜமுக சூரன், நவ. 14-ஆம் தேதிகளில் சிம்மமுக சூரன் உருவில் வந்து முருகனுடன் போா் புரியும் நிகழ்வு நடைபெறவுள்ளது

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நவ. 15-ஆம் தேதி சூரசம்ஹாரம் கீழரத வீதியில் நடைபெறவுள்ளது.

நவ. 16-ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. நவ. 17-ஆம் தேதி திருக்கல்யாண ஊா்வலமும், நவ. 18-ஆம் தேதி ஏகாந்த சேவையுடன் கந்த சஷ்டி விழா நிறைவடைகிறது

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், சிவாச்சாரியாா்கள், மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.

மேலும் பக்தா்களின் வசதிக்காக சூரசம்ஹாரம் நடைபெறும் நாளன்று அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்கவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.