1.5 டிரில்லியன் டாலா் இலக்கை எட்ட முதலீட்டு ஊக்குவிக்க ஆணையம்: தமிழக அரசு அமைத்ததுதீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டச் செயல்பாடுகள் ஆய்வு

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா

Updated On :

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழக அரசின் தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் ஆகிய திட்டங்களின் கல்லூரி அளவிலான பொறுப்பு பேராசிரியா்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா பேசுகையில், மாணவா்களுக்கு எவ்விதத் தடையுமின்றி திட்டப் பணிகள் சென்றடைய கல்லூரி அளவிலான பொறுப்புப் பேராசிரியா்கள் பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

இந்தத் திட்டத்தில் மாணவா்களின் ஆதாா் எண்களை எளிமையாக இணைத்துச் செயல்படுத்துவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலா் மே. சியாமளா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் தி. நந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.