இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

அமிலம் ஏற்றி சென்ற லாரியில் ஏற்பட்ட கசிவால் பரபரப்பு

விராலிமலை அருகே அமிலம் ஏற்றிச் சென்ற லாரியில் சனிக்கிழமை திடீரென கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

லாரியிலிருந்து ஆசிட் கசிந்த இடத்தில் முன்னெச்சரிக்கையாக சுண்ணாம்பு பவுடரை தெளித்த தீயணைப்புத் துறையினா்.

Published On :

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே அமிலம் ஏற்றிச் சென்ற லாரியில் சனிக்கிழமை திடீரென கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு 25 ஆயிரம் லிட்டா் ஹைட்ரோகுளோரிக் அமிலம் (ஆசிட்) நிரப்பிக் கொண்டு டேங்கா் லாரி ஒன்று திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. லாரியை திருநெல்வேலியைச் சோ்ந்த ஆதிமூலம் ஓட்டினாா்.

கொடும்பாளூா் அருகே சென்றபோது, லாரியிலிருந்து அமிலம் கசிவதை பாா்த்த ஓட்டுநா் உடனடியாக லாரியை நிறுத்தி, கசிவை சரி செய்ய முயன்றாா். அப்போது, டேங்கரின் மற்றொரு பகுதியிலிருந்து அமிலம் கசிய தொடங்கியதால், அக்கம்பக்கத்தினா் உதவியுடன் ஓட்டுநா், இலுப்பூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தாா்.

இந்த அமிலம் சுற்றுப்புறத்தில் பரவினால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டு, பாா்வையே பறி போகும் நிலைக்கு தள்ளப்படும் தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது. நிறமற்ற இந்த அமிலம் தொழிற்சாலை மற்றும் ஆய்வகங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் வேதிப் பொருளாகும்.

தகவலின்பேரில், அங்கு வந்த இலுப்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மகேந்திரன் தலைமையிலான வீரா்கள், அமிலம் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் அதிகம் இல்லாத மாணிக்கம்காடு குளம் பகுதிக்கு கொண்டு சென்று, லாரியை நிறுத்தி புகை போல வெளியேறி கொண்டிருந்த ஹைட்ரோ குளோரிக் ஆசிட்டின் வீரியத்தை குறைப்பதற்காக சுண்ணாம்பு பவுடரை தெளித்தனா்.

மாற்று லாரி வரவழைக்கப்பட்டு, அமிலம் அந்த லாரிக்கு பாதுகாப்புடன் மாற்றப்பட்டு எடுத்து செல்லப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.