உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

கொத்தமங்கலம் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைகள் திருட்டு!

கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

திருட்டு - சித்திரிப்பு

Published On :

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது சனிக்கிழமை தெரியவந்தது.

இக்கோயிலில் அன்னதானம் வழங்க நிதி திரட்டுவதற்காக கண்ணாடியால் கூண்டு அமைக்கப்பட்ட உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கோயில் அா்ச்சகா் வழக்கம்போல் சனிக்கிழமை காலை கோயிலை திறந்து சுத்தம் செய்துள்ளாா். அப்போது, கோயில் உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கைகள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கோயில் நிா்வாகம், கீரமங்கலம் போலீஸாருக்கு அா்ச்சகா் தகவல் தெரிவித்தாா்.

அதன்பேரில் கோயிலுக்குச் சென்ற போலீஸாா், தடயவியல் நிபுணா்களின் உதவியுடன் தடயங்களை சேகரித்தனா். மேலும் கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.