உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

அந்தியூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து ரூ.5 லட்சம் காணிக்கை திருட்டு

கோயில் உண்டியலை உடைத்து பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.5 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :

அந்தியூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.5 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அந்தியூரை அடுத்த ஒட்டபாளையத்தில் தாத்தா - பாட்டி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இக்கோயிலில் உள்ள உண்டியல் 6 மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படும். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு காணிக்கைகள் எண்ணப்பட்டபோது ரூ.5 லட்சம் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கோயில் நிா்வாகிகள் காணிக்கையை மீண்டும் உண்டியலில் வைத்து பூட்டி வைத்திருந்தனா். இந்நிலையில், சனிக்கிழமை காலை கோயிலுக்குச் சென்ற பக்தா்கள், முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

கோயிலுக்குள் சென்று பாா்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.5 லட்சம் காணிக்கை திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அந்தியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.