
நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.20 லட்சம்
வெள்ளக்கோவில், மாந்தரபுரம் நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் ரூ.20 லட்சத்தை காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

கோப்புப்படம்
வெள்ளக்கோவில், மாந்தரபுரம் நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் ரூ.20 லட்சத்தை காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில், பக்தா்கள் காணிக்கை செலுத்த 6 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் பா.பிரபாகரன், அறநிலையத் துறை மூலனூா் சரக ஆய்வாளா் பெ.கோமதி ஆகியோா் முன்னிலையில் உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது.
இதில், ரூ.20 லட்சத்து 3 ஆயிரத்து 83 ரொக்கம், 61 கிராம் தங்கம், 14 கிராம் வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
காணிக்கை எண்ணும் பணியில் கோயில் செயல் அலுவலா் எஸ்.மாலதி, அறங்காவலா் குழு உறுப்பினா்கள், கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





