இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

மாவட்ட ஹாக்கியில் வென்றோா் மாநிலப் போட்டிக்குத் தகுதி

புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவில் வெள்ளிக்கிழமை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் வென்ற அணிகள், மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஹாக்கி போட்டியில் பங்கேற்று விளையாடிய மாணவிகள்

Published On :

புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவில் வெள்ளிக்கிழமை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் வென்ற அணிகள், மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.

புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள் பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 8 குறுவட்ட அளவிலான அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்று விளையாடின.

மாணவா் பிரிவில் பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 17, 19 வயது பிரிவில் முதலிடமும், 14 வயது பிரிவில் தூய வளனாா் பள்ளி மாணவா்களும் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று உள்ளனா்.

இதேபோல் மாணவிகளுக்கான மூன்று பிரிவுகளிலும் வேங்கடகுளம் தூய வளனாா் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.