தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

சாலை விபத்தில் உணவக ஊழியா் உயிரிழப்பு

பலி... - பிரதிப் படம்

Published On :

விராலிமலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியாா் நிறுவன உணவக ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் மகன் கேசவன் (52). இவா் விராலிமலையை அடுத்துள்ள பூதக்குடி சுங்கச்சாவடி அருகே தனியாா் நிறுவனத்தில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை கேசவன் பணி முடிந்து, சுங்கச்சாவடியை அடுத்துள்ள உணவகம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவா் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில், விராலிமலை போலீஸாா் அங்கு சென்று கேசவனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.