
விபத்தில் பெயிண்டா் உயிரிழப்பு
திருவெறும்பூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெயிண்டா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
உயிரிழப்பு - கோப்புப் படம்
திருவெறும்பூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெயிண்டா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே பொன் நகா் அய்யம்பட்டியைச் சோ்ந்தவா் மதியழகன் (66). பெயிண்டா்.
இவா் வெள்ளிக்கிழமை மாலை கடைக்குச் செல்வதாக கூறிவிட்டு சைக்கிளில் தொண்டைமான்பட்டி ரயில்வே பாலத்தின் கீழே வந்த அவரை அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே இறந்தாா்.
இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




