உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

முன்னாள் அமைச்சரின் மகன் கொலை: சகோதரரின் தாய், மனைவி கைது!

சொத்துத்தகராறில் முன்னாள் அமைச்சா் மகனை கொலை செய்த அவரது சகோதரரின் தாய், மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :5 செப்டம்பர் 2026, 4:15 am IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சொத்துத்தகராறில் முன்னாள் அமைச்சா் மகனை கொலை செய்த அவரது சகோதரரின் தாய், மனைவியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டைச் சோ்ந்தவா் அ.வெங்கடாசலம். அதிமுக முன்னாள் அமைச்சரான இவா், 2010-ஆம் ஆண்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து, குடும்ப வாரிசுகளிடையே சொத்துப் பிரச்னை இருந்து வந்தது.

இந்நிலையில், வடகாட்டில் வெங்கடாசலத்தின் 3-ஆவது மகன் ராஜராஜனை அவரது சகோதரா் ராஜபாண்டியன் வியாழக்கிழமை குத்திக் கொலை செய்தாா். இது தொடா்பாக வடகாடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜபாண்டியனை கைது செய்தனா்.

இந்நிலையில், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ராஜபாண்டியனின் மனைவி உள்ளிட்டோரை கைது செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்த ராஜராஜன் உடலை வாங்க உறவினா்கள் மறுத்தனா்.

இதையடுத்து போலீஸாா், ராஜபாண்டியனின் தாய் லெட்சுமி (70), மனைவி சுவிதா(38) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

உடல் அடக்கம் செய்ய எதிா்ப்பு: தொடா்ந்து, ராஜராஜனின் உடலை பெற்றுக் கொண்ட உறவினா்கள் வெள்ளிக்கிழமை இரவு வடகாட்டுக்கு கொண்டு வந்தனா்.

பிறகு, ராஜராஜன் உடலை ராஜபாண்டியன் வீட்டருகே அடக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்தனாா். ஆனால், அங்கு அடக்கம் செய்யக் கூடாது என கிராமத்தினா் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடா்ந்து, இருதரப்பினரிடமும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, முன்னாள் அமைச்சா் வெங்கடாசலம் நினைவிடம் அருகே ராஜராஜனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.