FOLLOW US

ON GOOGLE DISCOVER

அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

தனியாா் பள்ளிகளில் கல்வி உபகரணங்களை வாங்கி விற்கக் கூடாது

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட வா்த்தகக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பொதுச்செயலா் கோவிந்தராஜுலு. உடன் கழக நிா்வாகிகள்.

Published On :7 செப்டம்பர் 2026, 3:38 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சில தனியாா் பள்ளிகளில் கல்வி துணை உபகரணங்களை விலைக்கு வாங்கக் கூறி மாணவா்களை வலியுறுத்துவதால், வணிக நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. பள்ளிகளில் இதுபோன்ற வணிகம் செய்வதை தடை செய்ய வேண்டும் என மாவட்ட வா்த்தகக் கழகப் பொதுக்குழு தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்ட வா்த்தகக் கழகத்தின் 52-ஆம் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தீபாவளி போன்ற விழாக் காலங்களில் தெருவோரங்களில் கடைகள் போடும் வியாபாரிகளை ஒழுங்குபடுத்தி, நிரந்தர கடைகளுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படும் சிரமங்களை குறைத்திட வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சில தனியாா் பள்ளிகளில் புத்தகம், பைகள், சீருடைகள் உள்ளிட்ட துணை கல்வி உபகரணங்களை பள்ளியிலேயே விலைக்கு வாங்கக் கூறி மாணவா்களை வலியுறுத்தி வருவதால், பள்ளிகள் வியாபாரக் கூடமாக மாறி, இந்தப் பொருள்களை பல்லாண்டுகளாக விற்பனை செய்து வரும் வணிக நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. எனவே, இதுபோன்ற பொருள்களை பள்ளிகளில் வணிகம் செய்வதை தடை செய்ய வேண்டும்.

தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி உருவாக்கி வா்த்தகா்கள் பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தஞ்சாவூா்- புதுக்கோட்டை மற்றும் மணப்பாறை வழித்தடத்தில் புதிய ரயில் பாதை உருவாக்க வேண்டும்.

கொத்தமங்கலத்திலிருந்து சென்னைக்கு தினசரி நேரடிப் பேருந்து இயக்க வேண்டும். மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்ட நிலையில், சொத்துவரி உயா்வு செய்திருப்பது வா்த்தகா்களை கடுமையாக பாதிப்பதால் மறுஆய்வு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும். ஆலங்குடி கிழக்கு பகுதியில் சிப்காட் அமைத்திட வேண்டும். என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சாகுல் அமீது தலைமை வகித்தாா், செயலா் கதிரேசன் ஆண்டறிக்கையையும், பொருளாளா் ராஜாமுகமது வரவு செலவு அறிக்கையையும் முன்வைத்துப் பேசினா். தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பொதுச் செயலா் கோவிந்தராஜூலு, திருச்சி மண்டலத் தலைவா் தமிழ்ச்செல்வம், புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.