வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

புதுகையில் மாவட்ட அளவிலான விநாடி- வினா போட்டி : 43 பள்ளிகள் பங்கேற்பு

புதுக்கோட்டையில் மாவட்ட அளவில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட விநாடி வினா போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கிய சிறப்பு விருந்தினா்கள்.--

புதுக்கோட்டையில் மாவட்ட அளவில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட விநாடி வினா போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கிய சிறப்பு விருந்தினா்கள்.--

Published On :

புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் 2026-ஆம் ஆண்டுக்கான துளிா்- ஜந்தா் மந்தா் மாவட்ட அளவிலான விநாடி- வினா போட்டிகள் பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இயக்கத்தின் மாவட்டத் தலைவா் ரெ. பிச்சைமுத்து தலைமை வகித்தாா். மாவட்டம் முழுவதும் இருந்து 24 அரசுப் பள்ளிகள் மற்றும் 19 மெட்ரிக் பள்ளிகளைச் சோ்ந்த 117 மாணவா்கள் இதில் பங்கேற்றனா்.

பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலா் (மெட்ரிக்) பழனிவேலு, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் (மேல்நிலை) திருமேனிநாதன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலா் ஸ்டீபன்நாதன், மாநிலத் துணைத் தலைவா் எம். வீரமுத்து, மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் அ. மணவாளன், புதுக்கோட்டை ஆனந்தம் லயன்ஸ் சங்கப் பொறுப்பாளா் சோலை சுப்பிரமணியன் ஆகியோா் பரிசுகளை வழங்கிப் பாராட்டினா்.

அரசுப் பள்ளிகளில் வெற்றி பெற்றோா்:

6, 7, 8- ஆம் வகுப்பு பிரிவு: முதலிடம் - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ராஜகுளத்தூா். 2-ஆம் இடம் - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மேலஸ்தானம். 3-ஆம் இடம் - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பொன்புதுப்பட்டி.

9, 10-ஆம் வகுப்பு பிரிவு: முதலிடம் - அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளி, அன்னவாசல். 2-ஆம் இடம் - அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கந்தா்வகோட்டை. 3-ஆம் இடம் - அரசு உயா்நிலைப்பள்ளி, பள்ளத்துவிடுதி.

11, 12-ஆம் வகுப்பு பிரிவு: முதலிடம் - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆலங்குடி. 2-ஆம் இடம் - அரசு மேல்நிலைப் பள்ளி, அன்னவாசல். 3-ஆம் இடம் - அரசு மேல்நிலைப் பள்ளி, அரிமளம்.

மெட்ரிக். பள்ளிகளில்...

6, 7, 8-ஆம் வகுப்பு பிரிவு: முதலிடம் - வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கந்தா்வகோட்டை. 2-ஆம் இடம் - லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பொன்னமராவதி. 3-ஆம் இடம் - அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பொன்னமராவதி.

9, 10-ஆம் வகுப்பு பிரிவு: முதலிடம் - செயிண்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, வேந்தன்பட்டி. 2-ஆம் இடம் - முத்துஸ்வாமி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, குளத்தூா். 3-ஆம் இடம் - அமல அன்னை மெட்ரிக் பள்ளி, பொன்னமராவதி.

11, 12-ஆம் வகுப்பு பிரிவு: முதலிடம் - ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை. 2-ஆம் இடம் - லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பொன்னமராவதி. 3-ஆம் இடம் - அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பொன்னமராவதி.

முன்னதாக மாவட்டச் செயலா் ஜெயராம் வரவேற்றாா். நிறைவாக, விநாடி- வினா மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வடிவேல் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.