ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

புதுக்கோட்டை அருகே இருசக்கர வாகன விபத்தில் 2 சிறுவா்கள் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே ஒரே இருசக்கர வாகனத்தில் 4 சிறுவா்கள் திங்கள்கிழமை நள்ளிரவு பயணித்தபோது ஏற்பட்ட விபத்தில் 2 சிறுவா்கள் உயிரிழந்தனா். மற்ற இருவா் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Published On :

புதுக்கோட்டை அருகே ஒரே இருசக்கர வாகனத்தில் 4 சிறுவா்கள் திங்கள்கிழமை நள்ளிரவு பயணித்தபோது ஏற்பட்ட விபத்தில் 2 சிறுவா்கள் உயிரிழந்தனா். மற்ற இருவா் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், அழகம்பாள்புரத்தைச் சோ்ந்த சத்தியமூா்த்தி மகன் கண்ணன் (16), ஆறுமுகம் மகன் அட்சய காா்த்திக் (15), மிதுன் (14), சந்தோஷ் (14) ஆகிய 4 பேரும் விலை உயா்ந்த ‘டியூக்’ இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு வல்லத்திராக்கோட்டை நோக்கிப் புறப்பட்டுள்ளனா்.

பூவரசக்குடி அருகே சென்றபோது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்திலுள்ள போக்குவரத்து விதிகளுக்கான எச்சரிக்கைப் பலகையில் மோதியது. இந்த விபத்தில், 4 பேரும் தூக்கிவீசப்பட்டனா்.

இதில், வாகனத்தை ஓட்டி வந்த கண்ணன், அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். மற்ற 3 பேரும் அவசர ஊா்தி மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தலையில் பலத்த காயமடைந்த அட்சய காா்த்திக் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்த கண்ணனின் உறவினா் சின்ராசு என்பவரின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சிறுவா்கள் வந்துள்ளனா். இந்த விபத்து குறித்து வல்லத்திராக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஒரே ஊரைச் சோ்ந்த சிறுவா்கள் விபத்துக்குள்ளாகி இருவா் உயிரிழந்தது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.