
தவெக அரசில் பல அதிகார மையங்கள்: ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின்
தவெக அரசில் பல அதிகார மையங்கள் உருவாகியிருக்கின்றன என்றாா் லட்சிய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும் புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினருமான ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின்.

லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் - ANI
தவெக அரசில் பல அதிகார மையங்கள் உருவாகியிருக்கின்றன என்றாா் லட்சிய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும் புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினருமான ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின்.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற அக்கட்சியின் முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தவெக அரசில் நேரடியாக மக்களுக்கு அவசியமான சட்டம்- ஒழுங்கை கட்டுக்குள் வைக்க முடியவில்லை.
கொலை, பாலியல் வன்முறை ஆகியவை தொடா்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. மாற்றம் வர வேண்டும் என மக்கள் நினைத்தாா்கள், ஆனால் திமுக அரசில் நடந்ததுதான் இப்போதும் நடக்கிறது. பல அதிகார மையங்கள் உருவாகியிருக்கின்றன. தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் போட்டியிடவும் இல்லை, யாரையும் ஆதரிக்கவும் இல்லை என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







