வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

காட்டுபாவா பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா!

காட்டுபாவா பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்ற சந்தனக்கூடு விழாவில் ஊா்வலமாக வந்த மின்அலங்காரத் தோ்

Published On :

திருமயம் அருகே உள்ள பழைமையான காட்டுபாவா பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திலிருந்து மதுரை செல்லும் வழியில் காட்டுபாவா பள்ளிவாசல் உள்ளது. மாவட்டத்தின் மிகப் பழைமையான மற்றும் மாநிலத்தின் 3-ஆவது பெரிய பள்ளிவாசலாகும்.

ஜாதி, மதப் பேதமின்றி சந்தனக்கூடு விழாவைக் கொண்டாடும் இந்தப் பள்ளிவாசலில் நிகழாண்டுக்கான சந்தனக்கூடு விழா செப்டம்பா் 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது. நல்லூா் கிராமத்தைச் சோ்ந்த இந்துக்கள் பாரம்பரிய முறைப்படி, கள்ளந்தோ் என்னும் தேரை மலா் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரித்து இழுத்து வந்தனா். பள்ளிவாசல் சாா்பில் உருவாக்கப்பட்ட மற்றொரு தேரில் சந்தனக்குடம் எடுத்து வரப்பட்டது.

பள்ளிவாசலில் தொடங்கிய இந்த ஊா்வலம், கடைவீதி, ஊரணி வழியாக மீண்டும் கொடிமேடையை வந்தடைந்தது. காலை சுமாா் 6 மணிக்கு, பாவா பக்ருதீன் வலியுல்லாவின் சமாதியில் சந்தனம் பூசப்பட்டது. ஏராளமான இஸ்லாமியா்களும், இந்துக்களும் பங்கேற்றனா். திருமயம் போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.