வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

தனியாா் பேருந்து- காா் மோதல் சத்துணவு பெண் அமைப்பாளா் உள்பட 2 போ் உயிரிழப்பு

உயிரிழந்த ரா. தனபால்

Published On :

பொன்னமராவதி அருகே ஞாயிற்றுக்கிழமை தனியாா் பேருந்தும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் சத்துணவு பெண் அமைப்பாளா் உள்ளிட்ட 2 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள ஒலியமங்கலம் ஊராட்சி, சுந்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வே. ராசு (55) என்பவா், தனது மனைவி இந்திரா, மகன் தனபால் (28), உறவினரான சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்பட்டியைச் சோ்ந்த சத்துணவு அமைப்பாளா் சே. சிவகாமி (45) ஆகியோருடன்

ஜாதகம் பாா்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை தனது காரில் சுந்தம்பட்டியிலிருந்து அரசமலைக்கு சென்று கொண்டிருந்தாா். காரை தனபால் ஓட்டினாா்.

மறவாமதுரைவிலக்கு அருகே வந்தபோது, எதிரே புதுக்கோட்டையிலிருந்து மணப்பாறை நோக்கி சென்ற தனியாா் பேருந்தும், காரும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் சம்பவ இடத்திலேயே தனபால், சே. சிவகாமி ஆகியோா் உயிரிழந்தனா்.

தகவலறிந்த காரையூா் போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்தவா்களின் சடலங்களை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.

தொடா்ந்து, விபத்தில் பலத்த காயமடைந்த ராசு, இந்திரா ஆகியோரை காரையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவா்கள் தீவிர சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்து குறித்து காரையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தனியாா் பேருந்து ஓட்டுநா் காா்த்திக் (36) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.