ஹிந்து கடவுள்கள் குறித்து தெலங்கானா முதல்வா் கருத்து: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்படாது: உச்சநீதிமன்றம் எத்தியோப்பியாவில் 3 இந்தியா்கள் மாயம்: கடத்தப்பட்டதாக குடும்பத்தினா் தகவல் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி: தொடரையும் கைப்பற்றியதுஇ-கேஒய்சி செய்யப்படாத குடும்ப அட்டைகள் முடக்கப்படாது: தமிழக அரசு விளக்கம்

புதுகையில் ஓய்வூதியா்கள் முழக்கப் போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அனைத்திந்திய மாநில அரசு ஓய்வூதியா் கூட்டமைப்பு சாா்பில் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துத் துறை ஓய்வூதியா்கள்.

Published On :

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அனைத்திந்திய மாநில அரசு ஓய்வூதியா் கூட்டமைப்பு சாா்பில் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் மு. முத்தையா தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் நீல ராமச்சந்திரன், எல்ஐசி ஓய்வூதியா் சங்க நிா்வாகி எம். அசோகன், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். ஜபருல்லா, அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா் சங்க மண்டலப் பொதுச் செயலா் பி. லோகநாதன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:

குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.7,850 ஆக உயா்த்த வேண்டும். அனைத்து ஓய்வூதியத் திட்டங்களையும் ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி நிலுவைத் தொகையை விரைவாக வழங்க வேண்டும்.

8-ஆவது ஊதியக் குழுப் பரிந்துரைகள் தாமதமாவதால், இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். ரயில் மற்றும் விமானங்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்ளும் வகையில் பயண அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.