அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

கார் கவிழ்ந்த விபத்தில்இளைஞர் சாவு: 9 பேர் காயம்

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கார் கவிழ்ந்த விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். 9 பேர் காயமடைந்தனர்.

Updated On :13 மே 2013, 1:28 am IST

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கார் கவிழ்ந்த விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். 9 பேர் காயமடைந்தனர்.

நாகை மாவட்டம், மயிலாடுறை அருகேயுள்ள வடகரை கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். கொடைக்கானலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காரில் புறப்பட்டு திருச்சி வழியாக மயிலாடுதுறை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். செங்கிப்பட்டி அருகே புதுக்குடி பகுதியில் வந்த இந்தக் கார், எதிர்பாராதவிதமாக சாலை நடுத்திட்டில் மோதியது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்தது. இதில், பலத்த காயமடைந்த கே. இலியாஸ் (16) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், கார் ஓட்டுநர் கோடீஸ்வரன் (30), அமீர் (22), முகமது அனீஸ் (20), முகமது இர்பான் (19), முகமது இம்ரான் (20), முகமது தாரீப் (19), அமீர் அப்பாஸ் (20), முகமது ஆசிக் (19) உள்பட 9 பேர் பலத்த காயங்களுடன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து செங்கிப்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.