பாவலரேறு சா. பாலசுந்தரம் நினைவேந்தல் நிகழ்ச்சி

தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் பாவலரேறு ச. பாலசுந்தரம் 7-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் தொல்காப்பியம் ஆராய்ச்சிக் காண்டிகை உரை நூல் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது

தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் பாவலரேறு ச. பாலசுந்தரம் 7-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் தொல்காப்பியம் ஆராய்ச்சிக் காண்டிகை உரை நூல் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதில் தொல்காப்பியம் ஆராய்ச்சிக் காண்டிகை உரை நூலை முன்னாள் அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா வெளியிட, அதை பாவலரேறு ச. பாலசுந்தரம் சகோதரர் ச. ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார். விழாவுக்கு தலைமை வகித்து, முன்னாள் அமைச்சர் உபயதுல்லா பேசியது:

இனிமையான பேச்சு, அரவணைக்கும் தன்மை, மலர்ந்த முகம் ஆகியவையே பெரியவர் ச. பாலசுந்தரத்தின் சிறப்பியல்புகள்.

ச. பாலசுந்தரம் ஏராளமான நல்ல நூல்களை எழுதியுள்ளார். அவருடைய தொல்காப்பியம் மற்றும் திருக்குறள் உரை காலம் கடந்தும் நிற்கும். அவர் தமிழால் என்றும் நம்முடன் வாழ்கிறார் என்றார். விழாவில் மோகனூர் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் சு. பழனியாண்டி, சேலம் பெரியார் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற தமிழ்த்துறை தலைவர் பெ. மாதையன், புலவர்கள் சி.சிவக்கொழுந்து, க. கோபண்ணா, தங்க. கலியமூர்த்தி, முனைவர் இரா. கலியபெருமாள், தஞ்சாவூர் பழ. மாறவர்மன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக, புலவர் கோ. பாண்டுரங்கன் வரவேற்றார். நிறைவில் புலவர் மா. கந்தசாமி நன்றி கூறினார்.

விழாவுக்கான ஏற்பாடுகளை பாவலரேறு ச. பாலசுந்தரம் மகனும் பேராசிரியருமான பா. மதிவாணன் மற்றும் அய்யா பதிப்பகத்தார் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com