தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

இலக்கிய விருதுகள் வழங்கும் விழா

தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருது வழங்கும் விழாவும், ஆவணப்பட விருது வழங்கும் விழாவும் அண்மையில் நடைபெற்றது.

Published On :

தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருது வழங்கும் விழாவும், ஆவணப்பட விருது வழங்கும் விழாவும் அண்மையில் நடைபெற்றது.

இதில் சிறந்த விளிம்புநிலை மக்கள் பற்றிய படைப்புக்கான சு. சமுத்திரம் நினைவு விருதை எழுத்தாளர் லட்சுமணன், சிறந்த சிறுகதை தொகுப்புக்கான அகிலா சேதுராமன் நினைவு விருதை எஸ். தேன்மொழி, சிறந்த கலை இலக்கிய விமர்சன நூலுக்கான இரா. நாகசுந்தரம் நினைவு விருதை பேராசிரியர் ய. மணிகண்டன் பெற்றனர்.

மேலும், சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான வ.சுப. மாணிக்கனார் நினைவு விருதை குறிஞ்சிவேலன், சிறந்த கவிதை தொகுப்புக்கான விருதை தவசிக்கருப்புசாமி, சிறந்த தொன்மம்சார் படைப்புக்கான விருதை பக்தவத்சல பாரதி, சிறந்த நாவலுக்கான கே. பாலச்சந்தர் நினைவு விருதை ஆதவன் தீட்சண்யா பெற்றனர்.

கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதை பெற்ற சிறந்த தமிழ்மொழி வளர்ச்சிக்கு உதவும் நூலுக்காக இராச. கலைவாணி, கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருதை கொ.மா.கோ. இளங்கோவன், 2014-ன் சிறந்த ஆவணப்படத்துக்கான பா. ராமச்சந்திரன் நினைவு விருதை இயக்குநர் சாரோன் செந்தில் பெற்றனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலர் சு. வெங்கடேசன் வாழ்த்திப் பேசினர். கலை இலக்கிய இரவு, ஆய்வரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாநிலத் துணைச் செயலர் களப்பிரன், பொருளாளர் சு. ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.